ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இதுவரையில் கொழும்பு மாநகரத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என்று கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.
மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ரூவான் விஜேயமுனி இதுகுறித்து நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இதுவரையில் தடுப்பூசி மருந்தை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவாக அதனை பெற்றுக்கொள்ளுமாறு இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

