எல்லை தாண்டி வரும் இந்திய இழுவை படகுகளை தடைசெய்யுமாறு கோரி யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், ஊழியர்களை செயலகத்திற்குள் செல்ல தடை விதித்து போராட்டம் நடத்துகின்றனர்.
பல மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

