ராஜகிரிய விபத்துச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு அல்லது இடைநிறுத்துமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2016 இராஜகிரிய விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டள்ளது.
2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவரை காயப்படுத்தியமை மற்றும் விபத்து தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சர் சுதத் அஸ்மடல, சம்பிக்கவின் சாரதி திலும் குமார ஆகியோருக்கு எதிராகவே இந்த வாக்கு தொடரப்பட்டுள்ளது.

