அ.தி.மு.க. மேயர் வேட்பாளராக என்னை தேர்வு செய்தால் மகிழ்ச்சி- ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பேட்டி

281 0

தலைமை எனக்கு 99-வது வார்டை ஒதுக்கி உள்ளது. இந்த வார்டில் எனக்கு அறிமுகமானவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதனால் தேர்தலை எளிதாக சந்திக்கும் நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க. என்னை மேயர் வேட்பாளராக அறிவித்தால் மகிழ்ச்சிதான்.

சமூக சமத்துவப்படை கட்சியின் நிறுவனராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி உள்ளார்.

இவருக்கு அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 99-வது வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. மேயர் வேட்பாளராக சிவகாமி நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இது குறித்து அவரிடம் கேட்ட போது சிவகாமி கூறியதாவது:-

எம்.பி., எம்.எல்.ஏ. போன்ற தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் எனக்கு உள்ளது. ஆனால் சென்னை மாநகராட்சி தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறேன். நான் 77,99,196 ஆகிய வார்டுகளில் ஏதாவது ஒன்றை ஒதுக்குமாறு கேட்டேன்.

தலைமை எனக்கு 99-வது வார்டை ஒதுக்கி உள்ளது. இந்த வார்டில் எனக்கு அறிமுகமானவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதனால் தேர்தலை எளிதாக சந்திக்கும் நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க. என்னை மேயர் வேட்பாளராக அறிவித்தால் மகிழ்ச்சிதான்.

ஆனாலும் அதற்கு முன்னதாக நான் கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அ.தி.மு.க. அதிக வார்டுகளை கைப்பற்ற வேண்டும். எனவே என்னை மேயர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து இப்போது எதுவும் பேசுவது முறையல்ல.

நாளை வேட்புமனுதாக்கல் செய்கிறேன். கூட்டணி கட்சி பொறுப்பாளர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனையின் பேரில் பிரசாரத்தில் ஈடுபடுவேன். பிரசாரத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வருவார்களா? என்பது பின்னர்தான் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.