பாகிஸ்தானில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக்கொலை

209 0

பாகிஸ்தானில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்சி மாவட்டம் உஹர்கி டவுன் பகுதியை சேர்ந்தவர் சைதன்லால். இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர். இந்து மதத்தை சேர்ந்த இவரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 4-ந்தேதி சிந்து மாகாணத்தில் உள்ள அனாஜ் மண்டி பகுதியில் இந்து தொழிலதிபர் சுனில்குமாரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். அதேபோல் கடந்த 30-ந் தேதி பாகிஸ்தானின் வடமேற்கு பெஷாவரி நகரில் கிறிஸ்தவ பாதிரியார் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.