வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

270 0

வெல்லம்பிட்டிய, சாலமுல்ல, கமகேவத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

படுகாயமடைந்தவர் ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர்.

பாதிக்கப்பட்ட நபர் பெண் ஒருவருடன் முச்சக்கர வண்டியில் கமகேவத்தை நோக்கி பயணித்த போதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.