வரகாபொல பிரதேசத்தில் பொலிஸாருக்கு இடையில் இடம்பெற்ற மோதல்!

262 0
இரண்டு திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த இரு பொலிஸ் குழுக்களுக்கு இடையில் அண்மையில் வரகாபொல பிரதேசத்தில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த குழுவினர் மது போதையில் இருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 29ஆம் திகதி இரவு குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹா சுற்றிவளைப்பு பிரிவின் அதிகாரிகளுக்கும் சிலாபம் பிரிவில் உள்ள பொலிஸ் நிலையமொன்றின் அதிகாரிகளுக்கும் இடையில் இவ்வாறு தகராறு ஏற்பட்டுள்ளது.

கண்டியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அதிகாரிகள் குழுவொன்றும் மற்றும் மாரவிலவில் இருந்து மற்றுமொரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மூன்று உத்தியோகத்தர்களும் கொழும்பு கண்டி பிரதான வீதியில் காரிலும் வந்துள்ளனர்.

வரக்காபொல பிரதேசத்தில் இவர்களது வாகனங்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முற்பட்ட போது மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவ இடத்திற்கு வரகாபொல பொலிஸார் வந்த போதிலும் மோதலை கட்டுப்படுத்த பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருந்தததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் சிலாபம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பொறுப்பதிகாரி, கம்பஹா சுற்றிவளைப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் காயமடைந்த நிலையில் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.