கொரோனா விதிமுறையை மீறியதால் ஹாங்காங் உள்துறை மந்திரி ராஜினாமா

171 0

ஹாங்காங்கின் உள்துறை மந்திரி கொரோனா கட்டுப்பாட்டு விதியை மீறி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. இதனால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

இந்தநிலையில் ஹாங்காங்கின் உள்துறை மந்திரி கொரோனா கட்டுப்பாட்டு விதியை மீறி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் தலைமையிலான மந்திரி சபையில் உள்துறை மந்திரியாக இருந்து வந்த காஸ்பர் சூய், கடந்த மாதம் 3-ந்தேதி பிறந்த நாள் விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

மந்திரி உள்பட அந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அணியவில்லை என்றும், சமூக இடைவெளியை பின்பற்றவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து காஸ்பர் சூய் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார்.