கொரோனா பரவினாலும் க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போடவேண்டிய அவசியமில்லை என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய உயர்தரப் பரீட்சையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பரீட்சையை ஒத்திவைத்தால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்றும், உலகில் வேறு எந்த நாடும் பரீட்சையை ஒத்திவைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து முன்னோக்கி வழிநடத்தப்பட வேண்டும் என்றும், கொரோனா பிரச்சினை இருக்கும் வரை அவர்கள் அதை சமாளித்து வாழ வேண்டும் என்றும் கூறினார்.
இதேவேளை, மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

