சுதந்திர தின நிகழ்வு ஒத்திகைக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து

264 0

74வது சுதந்திர தின நிகழ்வு ஒத்திகைக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
பெப்ரவரி 3ஆம் திகதி வரை தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இப்போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தின கொண்டாட்டங்கள், சுதந்திர சதுக்கத்தில் காலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஒத்திகையினால் சுதந்திர சதுக்கத்தை சுற்றி வாகன போக்குவரத்து அவ்வப்போது மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.