இன்று கொக்கட்டிசோலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர சென்றவர்களுக்கு கொலை மிரட்டல்.

383 0

இன்று கொக்கட்டிசோலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர சென்றவர்களுக்கு கொலை மிரட்டல்.

கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல். 1987ம் ஆண்டு ஜனவரி 27, 28 ஆம் தேதிகளில் அந்த பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது இறால் பண்ணையொன்றில் பணியாற்றிய உள்ளுர் பணியாளர்கள் உட்பட 87 பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டிருந்தனர். இக் காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் உட்பட தமிழ் போராட்ட அமைப்புகள் அந்த பகுதியில் நிலை கொண்டிருந்தாலும் அந்த பிரதேசம் விடுதலைப்புலிகளின் தளமாகவே விளங்கியது.

மட்டக்களப்பு வாவிக்கு அப்பாலுள்ள அந்த பகுதிக்கு வவுணதீவு மற்றும் பட்டிருப்பு மற்றும் வெல்லாவெளி ஆகிய மும்முனைகளில் நுழைந்த வேளை அந்த பகுதியில் பலருக்கு தொழில் வாய்ப்பு வழங்கிய அமெரிக்க முதலீட்டு இறால் வளர்ப்பு பண்ணை படையினரின் முற்றுகைக்குள்ளானது. அமெரிக்க நிறுவனமென்பதால் தங்களுக்கு அங்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையி்ல் உள்ளுர் மக்கள் பலரும் அங்கு தஞ்சம் பெற்றிருந்த நிலையில், உள்ளுர் பணியாளர்கள் உட்பட 87 பேர் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு வீதியில் போட்டு எரிக்கப்பட்டனர்.

மறைந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடம் பெற்ற இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு உட்பட சர்வ தேச சமூகம் இலங்கை அரசு மீது அவ்வேளை வன்மையான கண்டனத்தை வெளியிட்டிருந்தன. இந்த படுகொலைச் சம்பவம் இடம் பெற்று 14 வருடங்களின் பின்னர் 1991 ஜுன் மாதம் 12ஆம் தேதி இடம் பெற்ற மற்றுமோர் படுகொலைச் சம்பவத்தில் இராணுவத்தினரால் பெண்கள் , குழந்தைகள் உட்பட 152 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.