நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளிலிருந்து மீண்டெழுவதற்கான யோசனைகளைச் சமர்ப்பிப்பதற்கு ஆளும் கூட்டணியின் 10 பங்காளி கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் இலங்கை கமியூனிட்ஸ் கட்சியின் தலைமையகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த யோசனைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வழங்குவதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன் அதனைப் பொதுமக்களுக்கும் வெளிப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் மின்சார பிரச்சினை, யுகதனவி ஒப்பந்தம் மற்றும் உரத்தட்டுப்பாட்டு பிரச்சினை என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினை தொடர்பில் உண்மை தகவல்களை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

