‘சட்டவிரோதமான கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்’

178 0

தமிழர் விடுதலைக் கூட்டணியை பொய்களை வாரி வழங்கும் ஒரு குழுவினர் தந்திரமாக அபகரிக்கத் திட்டமிட்டு இன்று நடவடிக்கைக் குழுவைக் கூட்ட இருப்பதாகவும், எதிர்வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கும் கூட்டத்தில் நியமனங்களை வழங்க இருப்பதாகவும், இதில் கலந்து கொள்வது சட்டவிரோதமான செயலெனவும் ஆகவே இதில் கலந்து கொள்ள வேண்டாம் என கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

நேற்றைய திகதியிட்ட கடிதத்திலேயே குறித்த விடயத்தைக் குறிப்பிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஆனந்தசங்கரி, குறித்த மோசடிக்காரர்களுக்கெதிராக தனது சட்டத்தரணி மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இவர்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், அவர்களுடன் தொடர்பை வைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.