டென்மார்க்கில் 13ஆம் திருத்தசட்டத்திற்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!

441 0

13ஆம் திருத்தத்தை தமிழருக்கான அரசியற்தீர்வென காட்டும் முயற்சிக்கு எதிராக டென்மார்கிலும் இரண்டு நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளன.

ஈழத்தமிழ் மக்களின் நியாயமான சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு, அரசியற் தீர்வாக பதின்மூன்றாம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச் சதியை எதிர்த்து தாயகத்தில் நடைபெற இருக்கும் மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக டென்மார்கில் நேற்று (22.01.2022) தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கேணிங் மற்றும் கொல்பக் நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் கடும் குளிருக்கும் மத்தியிலும் உணர்புபூர்வமாக இடம்பெற்றது.

வழமைபோல் அகவணக்கத்துடன் இக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

பின்பு தாயகத்தில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் மதிப்பிற்குரிய கனகரத்தினம் சுகாஸ் அவர்களின் பேச்சு ஒலிபரப்பப்பட்டது. அப்பேச்சில் 13ஆம் திருத்தத்துக்குள் இருக்கும் ஒன்றுமில்லா மாகாணசபை போலி அதிகாரங்களைப்பற்றி துள்ளியமாக அவர் விளக்கமளித்தார்.

அதைத்தொடர்ந்து மக்கள், தாயகத்தில் துரோகத்தனமாக 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டி, இந்தியாவை நாடிய தழிழ் அரசியல்வாதிகள் மீது தமது பாரிய அதிர்ப்தியையும், எதிர்ப்பையும் , கோபத்தையும் வெளிக் காட்டினார்கள். இவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணமும் அதிர்ப்தியின் வெளிப்பாடாக அவ்விடத்தில் எரியூட்டப்பட்டது.

இறுதியாக தமிழரின் தாரக மந்திரத்துடன் இக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நிறைவுபெற்றது.