பாம்புகள் சூழ்ந்த நிலையில் வீட்டில் உயிரிழந்த நபர் குறித்து விசாரணை

169 0

அமெரிக்காவின் மேரிலாந்தில் உயிரிழந்த நபரின் வீட்டில் இருந்து 125 பாம்புகளை அமெரிக்க போலீசார் மீட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள சார்லஸ் கவுண்டி பகுதியில் ஒரு  வீட்டில் 49 வயது நபர் இறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலை அடுத்து உள்ளுரூ போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். இந்த அந்த நபரை சுற்றி பாம்புகள் நெளிந்து கொண்டிருந்தன. 14 அடி மஞ்சள் பர்மிய மலைப்பாம்பு உள்பட மொத்தம் 125 பாம்புகளை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஒரு நாளுக்கு மேலாக அந்த நபரை காணாததால், அவரை பார்க்க முடிவு செய்து அந்த வீட்டிற்கு சென்றதாக பக்கத்து வீட்டுக்காரர் கூறியுள்ளார். அந்த நபர் தரையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறந்து போன நபர் பாம்பு கடித்து இறந்தாரா அவர் எதற்காக அத்தனை பாம்புகளை வைத்திருந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
அங்கு முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை என போலீசார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக அந்த நபரின் உடல் பால்டிமோரில் உள்ள தலைமை மருத்துவ பரிசோதகர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் சுற்றுப்புறத்தில் வசிப்போர் பாம்புகள் குறித்து அச்சப்படதேவையில்லை என்றும் எந்த பாம்பும் தப்பித்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் சார்லஸ் கவுண்டி பகுதி விலங்குகள் கட்டுப்பாட்டுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெனிபர் ஹாரிஸ் உறுதியளித்துள்ளார்.