2020 ம் ஆண்டு அல்லது அற்கு முன்னர் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் வவுனியா உயர் தொழில்நுட்வியல் நிறுவனத்தில் இலவச முழுநேர உயர்கல்வியை தொடர்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
அந்தவகையில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா (முழுநேரம் /பகுதிநேரம்) 04 ஆண்டுகள்
உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா (முழுநேரம் / பகுதிநேரம்) 02½ ஆண்டுகள்.
இக்கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்கின்ற மாணவர்களில் எச் என் டி எ( HNDA) பூர்த்தி செய்பவர்கள் பல்கலைக்கழக பட்டத்திற்கு பிரதியீட்டுத் தகைமையினை பெறுவதுடன் அரச துறையில் பட்டதாரிகள் நியமனத்தின் போதும் தனியார் துறைகளில் இடைநிலை கணக்காளர்களாக வரமுடியும்.
மேலும் எச் என் டி எ (HNDE )கற்கையை பூர்த்தி செய்பவர்கள் தற்பொழுது ஆசிரியர் சேவையில் தகைமையாக கருதப்படுவதுடன் தனியார் துறையின் எதிர்பார்க்கைகளுக்கிணங்க தகைமையுடையவர்களாக வெளியேறுகின்றனர்.
குறித்த கற்றைநெறிகளிற்கான விண்ணப்ப முடிவுத்திகதி .. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு:உயர் தொழிநுட்பவியல் நிறுவனம், ஓமந்தை, வவுனியாதொ.இல : , , , என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

