கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கொவிட்-19 தொற்றால் இருவர், நேற்று (16) மரணமாடைந்துள்ளனர் என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட 58 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட மாதவன் வீதியில் வசித்து வந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு மரணடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களில் சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண், எதுவித கொவிட்-19 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும், மற்றைய பெண், இரண்டு சினோபாம் தடுப்பூசிகளை மாத்திரம் பெற்றுக் கொண்டவர் எனவும் இவர், கொவிட் நியூமோனியா நோயினால் உயிரிழந்துள்ளார் எனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் இம்மாதம் 01ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை 81 பேர், கொவிட்-19 தொற்றாளர்களாக இனங்கணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

