இலங்கைக்கு வலுக்கட்டாயமாக கொண்டு வரப்படும் “ஒமிக்ரோன்”

367 0

இலங்கைக்கு ஒமிக்ரோன் நோயாளிகளை வலுக்கட்டாயமாக கொண்டு வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார வல்லுநர்களின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் இந்த குற்றச்சாட்டை இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

விமானங்கள் மூலம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் இங்கு வந்த இலங்கையின் சமூகத்துக்குள் ஒமிக்ரோன் தொற்றை பரப்பி விட்டு நாடு திரும்புகின்ற நிலை இன்று உருவாகியுள்ளது.

எனவே இலங்கையின் சுகாதார கொள்கைகள் பிழையானவை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இலங்கையில் ஒமிக்ரோனின் அதிகரிப்பு விகிதம் 50ஆக உயரக்கூடும் என்றும் ரவி குமுதேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை அபேக்ஷா மருத்துவமனைக்கு 88 மில்லியன் ரூபா செலவில் எடுத்து வரப்பட்டுள்ள மரபணு வரிசை பரிசோதனை கருவி கடந்த பல மாதங்களாக பாவனையின்றி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.