தமிழின அழிப்பை மறைத்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்கும் வரலாற்றுத் துரோகிகளே!

51 0

உலக வரலாற்றில், மிகப்பெரும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களாகவும் அதற்கான நீதிக்காகவும் எமது இறைமையை நிலைநாட்டும் சுயநிர்ணய உரிமைக்காகவும் நாம் சமரசமின்றிப் போராடிவருகின்றோம். பிராந்திய வல்லரசான இந்தியாவின் நலன் சார்ந்தும் ஈழத்தமிழர்களின் அங்கீகாரம் பெறப்படாமலும் உருவாக்கப்பட்டதுமான இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாகிய ஒற்றையாட்சி அரசியல்யாப்பில் இணைக்கப்பட்ட 13ஆவது அரசியல் திருத்தத்தை எமது தேசம் என்றோ நிராகரித்திருந்த நிலையில், இன்று எமது மக்களின் ஆணைபெற்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை மீறி எமது மக்களின் இறைமையை கையொப்பமிட்டு விலைபேசும் அப்பட்டமான துரோகச்செயலை எமது தேசம் என்றும் ஏற்கப்போவதில்லை……….