உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் 1000 ஆவது நாள் நாளை அனுஷ்டிப்பு

194 0

உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் நடத்தப்பட்டு 1000 ஆவது நாள்  நாளைய தினம் (14) ராகம- தேவத்தை தேசிய பெசிலிக்காவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அன்றைய தினம், கொழும்பு மறை மாவட்ட பேராயார் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் சகல மறை மாவட்ட ஆயர்கள் மற்றும் துண‍ை ஆயர்களின்  பங்குபற்றுதலுடன் விசேட செப வழிபாடு  ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதாக கொழும்பு பேராயர் இல்லம் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்  மற்றும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுத் தாக்குதல்களட நடத்தப்பட்டு நூற்றுக்கணக்கனோர் பலியாகினர்.

பலர் அங்கவீனவர்களாவும் இன்னும் சிலர் குணப்படுத்தப்பட முடியாத நிலையில் தமது வாழ்க்கை கொண்டு செல்கின்றனர்.

இவ்விடயம் குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று 1000 நாட்களாகின்றது. எனினும், பாதிக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதான நீதி இதுவரை வழங்கப்படவில்லை.

இவ்விடயம் தொடர்பாகவும் தற்போது நாட்டில் மக்கள் எதிர்கொள்கின்ற சமூக, பொருளாதார நெருக்கடிகள் குறித்து கடவுளிடம் வேண்டிக்கொள்வதற்கான தேசிய மட்டத்திலான விசேட செப வழிபாடொன்றை நடத்த இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை  தீர்மானித்துள்ளது.

2022 ஜனவரி 14 ஆம் திகதி காலை 10 மணிக்கு ராகம- தேவத்தை தேசிய பெசிலிக்காவிலுள்ள இலங்கை மாதா கெபியிலிருந்து பெசிலிக்கா வரை  அருகில் ஆயர்கள், குருவானவர்கள், அருட் சகோதரர்கள் , அருட் சகோதரிகள் என மக்கள் அனைவரும் செபமாலை மற்றும் செபங்கள்  உச்சரித்து பவனி செல்வார்கள்.

அதன்  பின்னர்,தேவத்தை பெசிலிக்காவின் திறந்தவெளியில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட நாட்டின் சகல மறைமாவட்ட ஆயர்களின் தலைமையில் விசேட செப வழிபாடு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒப்புக்‍கொடுக்கப்படவுள்ளதுடன், இந்த செபவழிபாடு நண்பகல் 12 மணியளவில் நிறைவடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.