வீட்டுத்தோட்ட திட்டத்தை ஊக்குவிக்கும் அரசு – விவசாய பணிப்பாளர் நாயகம் தகவல்

178 0

நாடு தழுவிய ரீதியில் வீட்டுத்தோட்டம்  ஆரம்பிக்கும் செயற்றிட்டம்  எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் விவசாய அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் பங்களிப்புடன் விசேட ஏற்பாடுகளுடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

20 சதுர அடிக்கும் குறைவான அளவில் ஆரம்பிக்கப்படும் வீட்டுத்தோட்டத்திற்கு 5000 ரூபாயும் அதற்கு மேற்பட்டவைகளுக்கு ரூபாய் 10000 வீதம் கொடுப்பனவையும் வழங்குவதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.

இதனால் வீடுகளில் காய்கறி உற்பத்திகள் மேற்கொள்ள முடியும் என்பதுடன் காய்கறிகளின் விலையும் குறையும் அரசு விநியோகிக்கும்  மறக்கறி விதைகளும் எதிர்காலத்தில்  மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே 2.5 மில்லியன் விதைகளை வழங்கியுள்ளது. எனினும் பருவநிலை மாற்றமும்  தற்போதைய காய்கறி விலையேற்றத்திற்கு காரணமெனவும் அவர் குறிப்பிட்டார்.