நாளை வெளியிடப்படும் சந்திரிக்காவின் வாழ்க்கை சரிதம்

49 0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க (Shirani Bandaranayake) ஆகியோர், நாளைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள வைபவம் ஒன்றில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள “சந்திரிக்கா” என்ற நூல் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க நினைவு மாநாட்டு மண்டபத்தில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார்.