தமிழ் அரசியல் கைதிகள் ஐவர் விடுதலை

287 0
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் ஐவர், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் 2019 ஆம் ஆண்டு முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் பளை பகுதிகளைச் சேர்ந்த 5 தமிழ் அரசியல் கைதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.