மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் தெரிவு

261 0

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக எம். இஸ்ஸடீன் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்த நிலையில், இன்று சபை அமர்வு நடைபெற்றது.

இதன்போது, மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் பதவிக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் எம். இஸ்ஸடீனின் பெயர் முன்மொழியப்பட்டது.

அவர் மன்னார் பிரதேச சபையின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

மன்னார் பிரதேச சபைக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த மாதம் 27, 31 ஆம் திகதிகளில் சமர்ப்பிக்கப்பட்டது.

சாஹூல் ஹமீட் மொஹம்மட் முஜஹிர் தலைமையில் இரண்டு தடவை முன்மொழியப்பட்டிருந்த வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.