குடிமக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும்

275 0

வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதற்கு முன்னர், குடிமக்களின் வாழ்வாதாரத்தைத் தொடர்வதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் வாழ்வாதாரத்திற்கான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை.

தற்போதைய நிர்வாகத்தின் நிதி முறைகேடால் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வட்டித்தொகையை ஜனவரி 18 ஆம் திகதிக்குள் செலுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மருந்துகள், மருத்துவமனை உபகரணங்கள், உணவு, மசகு எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதிலும் நாடு சவால்களை எதிர்கொள்கிறது.

நாட்டுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உயிர்காக்கும் உபகரணங்களை பெற்றுக் கொடுக்க முடியாவிட்டால் பொது மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.