தானைத்தளபதியே!

732 0

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது தமிழர்களின் நம்பிக்கையில் ஒன்று 1993 ஆம் ஆண்டு வங்கங்கடலின் ஊடாக வசந்தம் ஒன்று வரவுள்ளதாக ஈழத்தாய் காத்திருந்தாள்.

பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து கொண்டு தளபதி கிட்டு உட்பட பத்து விடுதலைப்புலி போராளிகளும் தாயகம் நோக்கி வங்கக்கடலில் எம்.வி. அகத் என்னும் கப்பலில் தமது பயணத்தை தொடர்ந்தனர்

சர்வதேச உளவுப்பிரிவுகளின் கழுகு கண்களின் சிக்கியஅந்த கப்பல் பயணம் பற்றிய தகவல் இந்திய அரசுக்கு பரிமாறப்பட்டது. இந்திய தேசம் அந்த கப்பலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முனைந்தது .

சர்வதேச கடலில் பயணித்த அக் கப்பலை இந்திய கடற்படை தமது கடல் எல்லைக்குள் கொண்டு செல்ல  முயற்சித்தது.  முடியாத போது கப்பலில் பயணித்த போராளிகளை சரணடையுமாறு இந்திய அரசு  பணித்தது பின் மிரட்டிய போதும்   அடிபணியாது தாங்கள் கொண்ட கொள்கையின் உறுதியோடுநின்று தாம் பயணித்த கப்பலையே தகர்த்து  தாமும் வீர காவியமாகி போனார்கள் தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளும் இந்திய கொடும் வஞ்சகத்தால்

கேணல் கிட்டு: சதாசிவம் கிருஷ்ணகுமார் – வல்வெட்டித்துறை

லெப். கேணல் குட்டிசிறி : இராசையா சிறிகணேசன் – சுதுமைலை வடக்கு, மானிப்பாய்.

கடற்புலி கப்டன் குணசீலன் (குணராஜ்) : சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா – 2ம் குறுக்குத்தெருஇ உதயபுரம் மணியம்தோட்டம்

கடற்புலி கப்டன் றொசான் : இரத்தினசிங்கம் அருணராசா – அரசடி வீதி நல்லுர் யாழ்ப்பாணம்

கடற்புலி கப்டன் நாயகன் : சிவலிங்கம் கேசவன் – பொலிகண்டி வல்வெட்டித்துறை

கடற்புலி கப்டன் ஜீவா : நடராசா மார்க்ஜெராஜ் – கொய்யத்தோட்ட ஒழுங்கை, யாழ்ப்பாணம்

கடற்புலி லெப். தூயவன் : மகாலிங்கம் ஜெயலிங்கம் – கண்டிவீதி, யாழ்ப்பாணம்

கடற்புலி லெப். நல்லவன் : சிலஞானசுந்தரம் ரமேஸ் –மணியந்தோட்டம், கொழும்புத்துறை யாழ்ப்பாணம்

கடற்புலி லெப். அமுதன் : அலோசியஸ் ஜான்சன் – 2ம் குறுக்குத்தெரு, நாவாந்துறைவடக்கு,யாழ்ப்பாணம்

மேஜர். வேலன் மலரவன் : சுந்தரலிங்கம் சுந்தரவேல் – வியாபாரிமூலை, பருத்தித்துறை

ஆகிய மாவீரர்களே அன்றைய நாளில் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.

“கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். நீண்ட, ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு “ என தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தளபதி கிட்டுவைப் பற்றி கூறியுள்ளார்.

அந்த ஒய்வில்லாத புயலில் எம் போராட்ட வரலாறு சுழன்றுகொண்டுதான் இருக்கிறது.