ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகும்புர பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – அவிசாவளை ஹைலெவல் வீதியின் மகும்புர பகுதியில் கெப் வண்டியொன்று குறித்த நபர் மீது மோதியதனாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 82 வயதான பன்னிபிட்டிய பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் ஹோமாகம வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் கெப் வாகனத்தின் சாரதியின் கவனக் குறைவினால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்த பொலிஸார், அவரை கைதுசெய்துள்ளனர்.
அதேநேரம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

