பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் விசாரணை

253 0

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியதாக தெரிவித்து சகோதர மொழி பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு, பொலிஸ் ஊடகபபேச்சாளர் நிஹால் தல்துவ இன்று (10)  அழைக்கப்பட்டிருந்தார்.

ஜனாதிபதி அவமதிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவிக்க முடியாதென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகளுக்காக பொலிஸ் ஊடகப்பேச்சாளரை மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று (10 அழைத்திருந்தது.

இதேவேளை ஆணைக்குழுவில் ஆஜரான பொலிஸ் ஊடகப்பேச்சாளர், தான் இதுபோன்ற கருத்துகளை அந்த பத்திரிகைக்கு தெரிவிக்கவில்லை என சாட்சியமளித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இது போன்ற கருத்துகளை தெரிவிக்கவில்லை என்றால் இதனை உறுதிமொழியாக ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.