அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை- இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன

572 0

நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் மருந்துகளை வீடுகளில் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொதுமக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனா மற்றும் இந்தியாவில் இருந்து கடன் வசதியின் கீழ் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதால், மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு டொலர் சம்பந்தமான பிரச்சினை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு நபர்களால் பரப்பப்படும் வதந்திகளால் நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும், போதியளவு மருந்துகள் உள்ளதால் மக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீன அரசாங்கங்கள் போதுமான மருந்துகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளன என்றார்.