அதிரடிப்படையில் முதல் முறையாக உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு!

181 0

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் பெண் பிரதான பரிசோதகர் ஒருவர், விசேட அதிரடிப்படையின் வரலாற்றில் முதல் முறையாக உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

அதன்படி, என்.டி.என். குமாரி, பொலிஸ் விசேட அதிரடிப்படையின்  உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதற்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையின் எட்டு பிரதான பரிசோதகர்களும்  உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப் படை ஆகியவற்றின் பரிந்துரையின் பேரில், தேசிய பாதுகாப்பைப் பேணுவதற்கும் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கும் அவர்களது திறமைகள் மற்றும் சேவைத் தேவைகளின் அடிப்படையில் இந்த நியமனங்கள் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசேட அதிரடிப் படையின் பிரதம பரிசோதகர் பதவிக்கு  இரண்டு பெண் அதிகாரிகள் உள்ளடங்கலாக  52 அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டதாகவும், அவர்களில் 8 அதிகாரிகள் மற்றும் ஒரு பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிரடிப்படை தெரிவித்துள்ளது.