2023 நடுப்பகுதிக்குள் நாடாளுமன்ற தேர்தல்!

238 0

2023நடுப்பகுதிக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

உரியநேரத்தில் மாகாணசபை உள்ளுராட்சி தேர்தல்களை நடத்திக்காட்டுங்கள் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியி;ன வேட்பாளர் இல்லாத பொதுவேட்பாளரை நிறுத்தும் ஆதரிக்கும் எண்ணம் கட்சிக்கு இல்லை என தெரிவித்துள்ள அவர் 2015 இல் பொதுவேட்பாளரை நிறுத்தியதன் மூலம் உரிய பாடத்தை படித்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

முhகாணசபைகள் தேர்தல் தாமதமாவது அரசமைப்பிற்கு முரணானது என தெரிவித்துள்ள அவர் 2023 ற்க்கு பின்னர் ஜனாதிபதி ஜனாதிபதி தேர்தலிற்கு அழைப்பு விடுக்கலாம் அதற்கு நாங்கள் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் பொதுக்கொள்கையுடன் செயற்பட எந்த கட்சியும் முன்வரலாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.