பதுளை மாவட்டத்தின் ரிதீமாலியத்த இளைஞர் வர்த்தக கிராமத்தில் நேற்று (07) இரவு மின்சாரம் தடைப்பட்ட போது காட்டு யானைகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, காட்டு யானைகள் கிராம மக்களின் சோளப் பயிர்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
மின்சாரம் தடைப்பட்ட போது கிராமத்தைச் சுற்றியுள்ள மின் வேலியை உடைத்துக் கொண்டு காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

