பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை முழு திறனுடன் மீண்டும் ஆரம்பிக்க எந்த தீர்மானம் எட்டப்படவில்லை

272 0

பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை முழு வீச்சில் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு பல நாட்களின் பின்னரே பல்கலைக்கழகங்கள் தொடர்பில் தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதல் இரண்டு தடுப்பூசி டோஸ்களைப் பெற்ற 20 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் இரண்டாவது தடுப்பூசி டோஸுக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னர் அருகிலுள்ள மருத்துவமனையில் பூஸ்டர் டோஸை பெறலாம்.
ஒமிக்ரோன் பிறழ்வின் விரைவான பரவலைத் தடுக்க, பூஸ்டர் டோஸை பெறுவதை உறுதிப்படுத்துமாறு பொது மக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒமிக்ரோன் பிறழ்வால் பாதிக்கப்பட்ட 40 க்கும் மேற்பட்டதொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.