2023ஆம் ஆண்டு இறுதிக்குள் மொரகொல்ல நீர்மின் திட்டத்தினூடாக 30.5 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்வட்டத்திற்கு இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சரான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மொரகொல்ல திட்டம் தொடர்பான கண்காணிப்பு விஜயத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
திட்டப் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மிகக் குறைந்த செலவில் தேசிய மின்கட்டமைப்பிற்கு மின்சாரம் வழங்கக்கூடிய நீர்மின் நிலையங்கள் அதிகளவில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்றுநோயின் போது தேசிய கட்டத்திற்கு மின்சாரம் வழங்கும் இலக்கை அவர்களால் அடைய முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் அதிகளவான மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், இவற்றை தேசிய மின்கட்டமைப்பில் விரைவாகச் சேர்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

