பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெட்ரோசோ தோட்டப் பகுதியில் நேற்று காலை அனுமதியின்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் கைதான சந்தேக நபர்கள் 34,37 மற்றும் 38 வயதுடைய பொகவந்தாலாவை பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

