கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை விமானப் படையினரால் 24×7 மணி நேர கொவிட் தடுப்பூசி மையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வௌிநாடுகளில் இ்ருந்து தாயகம் திரும்பும், கொவிட் தடுப்பூசியின் முதலாவது, இரண்டாவது அல்லது பூஸ்டர் டோஸினை பெற்றுக் கொள்ளாத இலங்கையர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்த தடுப்பூசி மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படையின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கமைய, குறித்த அனைவருக்கும் பைசர் தடுபபூசி செலுத்தப்படவுள்ளதாக இலங்கை விமானப்படையின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

