கடந்த ஒரு வாரத்தில் 3 மடங்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,481 பேருக்கு பரவியது. இதனை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது.
ஆனாலும், சமூக பரவலாக இது மாறிவிட்டதால் பாதிப்போர் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணாநகரில் 293 பேருக்கு தொற்று பரவி இருக்கிறது. இதேபோல கோடம்பாக்கம் மண்டலத்தில் 287 பேர், அடையாரில் 258 பேர், ராயபுரத்தில் 225 பேர் பாதிக்கப்பட்டனர்.
சென்னையில் தற்போது 7,878 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் இருந்து 970 பேரும், அடையாறில் இருந்து 954 பேரும், கோடம்பாக்கத்தில் 918 பேரும் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதேபோல அண்ணாநகரில் 836 பேர், அம்பத்தூரில் 503 பேர், வளசரவாக்கத்தில் 509 பேர், தண்டையார்பேட்டையில் 551 பேர், ராயபுரத்தில் 762 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள்.
மண்டலம் வாரியாக நேற்று பாதிக்கப்பட்டோர் விவரம்:
1. திருவொற்றியூர்-19
2. மணலி -29
3. மாதவரம் -55
4. தண்டையார்பேட்டை -189
5. ராயபுரம் -225
7. அம்பத்தூர் -150
8. அண்ணாநகர் -293
9. தேனாம்பேட்டை 299
10. கோடம்பாக்கம் – 287
11. வளசரவாக்கம் -153
12. ஆலந்தூர் -96
13. அடையார் -258
14. பெருங்குடி – 137

