வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் புல் மேய்ந்து திரிந்த மாடுகள் இரண்டு, மின்சாரம் தாக்கி, நேற்று (05) உயிரிழந்துள்ளன.
கடும் மழை பெய்து கொண்டிருந்த போது சம்பவம் நடந்த இடத்தில் அமைந்திருந்த மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் கசிந்ததன் காரணமாக மின்சாரம் தாக்கியதில் இந்த மாடுகள் உயிரிழந்துள்ளன.
சம்பவம் நடந்த இடத்துக்கு உடனடியாக வருகை தந்த இலங்கை மின்சார சபையின் வாழைச்சேனை பிராந்திய ஊழியர்கள், மின் இணைப்பை சீர் செய்து, இறந்த மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

