சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜனக் நந்தன உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஒழுக்காற்று விசாரணைகளுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் வைத்திய, நலன்புரி மற்றும் பொலிஸ் மேலதிக படை பிரிவுகளின் பிரதானியாக செயற்படும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின், பிரத்தியேக உதவியாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜனக் நந்தன இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
கடந்த இரு வருடங்களாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜனக் நந்தன கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

