இரசாயன உரங்களுக்கு ஜனாதிபதி தடை விதித்தமையே நாட்டில் பஞ்சம் ஏற்படப்போவதற்குக் காரணமென மக்கள் விடுதலை முன்னணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, இரசாயன உரங்களுக்கு தடை விதித்தமையே நாட்டில் பஞ்சம் ஏற்படப்போவதற்கானப் பிரதான காரணம். ஜனாதிபதியின் இத்தீர்மானத்துக்கு எதிராக அப்போது அமைச்சரவையில் இருந்த ஒருவர் கூட வாய் திறக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் சில பிரச்சினைகளுக்குக் கொரோனா வைரஸ் காரணமில்லை. ஜனாதிபதியின் தவறான தீர்மானம், தவறுகள், தனது குறைகளை ஏற்றுக்கொள்ளாமை, குடும்ப ஆட்சியே உள்ளிட்டவையே பிரதான காரணம் எனவும் தெரிவித்தார்.
முன்பொருபோதும் இல்லாத பாரிய பிரச்சினைகளுக்கு நாட்டு மக்கள் முகங்கொடுத்து வருகிறார்கள்.

