5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு- ஓட்டல் உரிமையாளர்கள் கவலை

204 0

சென்னையை பொறுத்த வரை டீ கடை, சிறிய பெரிய ஓட்டல்கள், நட்சத்திர ஓட்டல்கள் என்று சுமார் 10 ஆயிரம் உள்ளன. இந்த ஓட்டல்களில் வேலை பார்க்கும் தொழிலாளர் உள்பட மறைமுகமாகவும் நேரடியாகவும் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளன. அதன்படி ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில்தான் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும்.

எனவே ஓட்டல்களில் ஒரு மேஜைக்கு இருவர் மட்டுமே உட்கார்ந்து சாப்பிட வைத்தனர். டீ கடைகளில் கூட்டம் கூடுவதை அனுமதிக்க வில்லை.

இதுகுறித்து சென்னை ஓட்டல் உரிமையாளர்கள சங்க தலைவர் ரவி கூறியதாவது:-

கொரோனா பொது முடக்கத்தில் இருந்து இப்போதுதான் மீண்டு வியாபாரம் சூடுபிடித்து வந்தது. அதற்குள் மீண்டும் கட்டுப்பாடு வந்திருப்பது தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சென்னையை பொறுத்த வரை டீ கடை, சிறிய பெரிய ஓட்டல்கள், நட்சத்திர ஓட்டல்கள் என்று சுமார் 10 ஆயிரம் உள்ளன. இந்த ஓட்டல்களில் வேலை பார்க்கும் தொழிலாளர் உள்பட மறைமுகமாகவும் நேரடியாகவும் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இனி கட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் ஊழியர்களையும் 50 சதவீதமாக குறைக்க வேண்டிய கட்டாயம். அவர்கள் வேலை வாய்ப்பை இழப்பார்கள்.

இது தவிர மறைமுகமாக வேலை வாய்ப்பு பெற்று வருபவர்களிலும் பாதியளவுக்கு வாய்ப்பு குறையும்.

குறைந்த பட்சம் 5 லட்சம் பேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.