இலங்கை சீனி நிறுவனத்துக்குரிய பெல்வத்த சீனி தொழிற்சாலை களஞ்சியசாலையிலிருந்து 100 உர மூட்டைகள் திருடப்பட்டுள்ளன என, புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
கரும்பு உற்பத்திக்காக குறித்த உர மூட்டைகள் சேமிக்கப்பட்டிருந்ததாகவும் களஞ்சியசாலையின் கதவை உடைத்து இந்த திருட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
50 கிலோகிராம் 20 யூரியா உர மூட்டைகள் , டீ.எஸ்.பி மற்றும் எம்.ஓ.பி உரமூட்டைகள் 80 இவ்வாறு திருடப்பட்டுள்ளன.
இவற்றின் சந்தைப் பெறுமதி 10 -15 இலட்சம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

