லண்டன் பெண் கொலை – இளம் தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

330 0

லண்டனிலிருந்து திரும்பிய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் உடலம் உறவினர்களிடம் இன்று (29) கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கொலையுடன் தொடர்புடைய 22 வயதுடைய இளைஞன் மற்றும் துணைபுரிந்த அவரது மனைவி இருவரும் இன்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.