யாழ் மாநகர சபை முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர் வெளிநடப்பு!

302 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் சிலர் இன்று சபையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்வதாக தெரிவித்து அவர்கள் இவ்வாறு வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாநகர சபை வளாகத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது மாநகர முதல்வரின் தன்னிச்சையான செயற்பாடுகளை கட்டுப்படுத்து, சபையின் மரபை காப்பாற்று உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.