குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்போர் மீது அதிகபட்ச தண்டனை பாயும் .
காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சைபர் கிரைம் மற்றும் ‘போக்சோ’ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் நசீம் ஜான் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) கிருஷ்ணசாமி பேசுகையில்:
மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தினால் அதிகப்படியான தண்டனை கிடைக்கும். இதற்கு ஜாமீன் கிடைப்பது மிக அரிது என்றார்.
காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ‘போக்சோ’ சட்டம் குறித்து விவரித்தார். மேலும், ‘உரிய வயதில் திருமணம் செய்ய வேண்டும். முன்கூட்டியே செய்தால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் கெடும்.
குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்போர் மீது அதிகபட்ச தண்டனை பாயும் என பேசினார். சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் அந்தோணியம்மாள், ‘ஏ.டி.எம்., பின் நம்பரை யாரிடமும் பகிரக் கூடாது. வீடியோகாலில் பேசுவதை தவிர்த்தல் வேண்டும் என்றார்.

