யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.

304 0

24.12.2021 வெள்ளிக்கிழமை யேர்மனி டோட்முண்ட் நகரத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு இன்றைய கொரோனா விசக்கிருமியின் சூழலுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் சிறப்பாக நடைபெற்றது.
வருகைதந்திருந்த மக்கள் தேசத்தின் குரல் பாலாண்ணாவின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதுடன் மேடையில் சிறுவர்களின் பேச்சு மற்றும் இசைவணக்கமும் செலுத்தி தமது வணக்கத்தைச் செலுத்தினர்.