கரடுமுரடான ரோடு: ‘எப்போதான் சரி பண்ணுவ’ வைரலாகும் வாலிபரின் பாடல்

319 0

தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில், மக்கள் படும் அவதியை வாலிபர் ஒருவர் பாடல் மூலம் வெளியிட்டது வைரலாகி வருகிறது.

நாகர்கோவில் – மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க “அட என்னையா ரோடு இப்படி இருக்கு” என, இளைஞர் ஒருவர் வெளியிட்ட பாடல் வைரலாகி உள்ளது. நாகர்கோவில் முதல் மார்த்தாண்டம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, பராமரிப்பின்றி காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், நோயாளிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த சாலையை சீரமைக்கக் கோரி, ஏ.ஆர்.சுமன் என்ற இளைஞர் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். “அட என்னையா ரோடு”, “அது இப்படி இருக்கு”, “எப்போதான் சரி பண்ணுவ” என தொடங்கும் அந்த பாடல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.youtube.com/watch?v=X0MoOZQcbdM