திடீரென கடற்கரையில் தரையிறங்கிய விமானம்!

265 0

இலகுரக விமானம் ஒன்று வடக்கு பயாகல கடற்கரையில் திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தரையிறக்கப்பட்ட விமானம் சிவில் விமான சேவை அதிகார சபைக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடற்கரையில் தரையிறங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த நேரத்தில் விமானத்தில் இருவர் இருந்ததாகவும், திடீரென தரையிறங்கியதால் அவர்களுக்கோ விமானத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த கட்டுகுருந்த விமானப்படை தள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.