பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சனைகளை தீர்க்க ஒவ்வொரு மாதமும் அவர்களுக்காக தனியாக ஒரு தினம் (பொலிஸ் தினம்) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகரவின் யோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அதன்படி, முதலாவது நிகழ்ச்சி இன்று (22) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

