தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவையில் இருந்து மத்தளை நோக்கிய பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (22) காலை பாரட்டுவ மற்றும் கபுதுவ இடையேயான பரிமாற்றத்திற்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மத்தளை நோக்கி பயணித்த ட்ரக் பாரவூர்தி ஒன்று கவனக்குறைவாக நிறுத்தப்பட்ட நிலையில், அதே திசையில் பயணித்த பௌசர் ஒன்று அதில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் ட்ரக் பாரவூர்தியில் பயணித்த கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பௌசர் வாகனத்தின் சாரதியான 61 வயதுடைய கொனவலவைச் சேர்ந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

